செய்தி

சீன மருந்தினை இலங்கைக்கு கொண்டுவர தீவிர முயற்சி?

உலகளவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் 5 கோடியை கடந்துள்ளது.

கொரோனாவிற்கான தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனமோ, உலக நாடுகளோ இன்னமும் முழுமையான அங்கீகாரத்தை வழங்கவில்லை.

இந்நிலையில், சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என எதிர்கட்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினை தடுக்கும் குணப்படுத்தும் என இன்னமும் உறுதிசெய்யப்படாத சீன மருந்தொன்றினை கொண்டுவருவதற்கு இலங்கை அரசாங்கம் முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சிரேஸ்ட அரச அதிகாரிகளுடன் தொடர்புடைய வர்த்தகர்கள் சிலர் இந்த மருந்தினை இலங்கையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட சீன மருந்தினை உலக சுகாதார ஸ்தாபனம் இன்னமும் அங்கீகரிக்கவில்லை என தெரிவித்துள்ள அவர் இந்த மருந்தினை பயன்படுத்தி வர்த்தகர்கள் பெரும் பணத்தை உழைப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகசுகாதாரம் அமெரிக்கா ஐரோப்பியநாடுகளில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை ஏற்றுக்கொண்டுள்ளது சீன ரஸ்ய மருந்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகளை எமது மக்களிடம் பரிசோதித்துப்பார்க்க இடமளிக்க முடியாது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

தீர்வு வழங்கும் பொறுப்பிலிருந்து ராஜபக்ச அரசு நழுவவே முடியாது! அமைச்சர் வாசுதேவ

அம்மு

இலங்கையின் அடுத்த பிரதமர் யார்? பிளவுபடுமா கூட்டமைப்பு? கணித்துக்கூறும் பிரபல ஜோதிடர்

அம்மு

யாழில் பிரபல தனியார் ஹோட்டல் சுகாதாரப் பிரிவினரால் பூட்டப்பட்டது

அம்மு