செய்தி

இலங்கை முழுவதும் கொரோனா பரவல்கள் ஏற்படும் ஆபத்து!!

இலங்கை முழுவதும் கொரோனா பரவல்கள் உருவாகும் ஆபத்துக்கள் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

“ஒரு ஊழியர் அல்லது சிலர் முதலில் கொரோனா தொற்றுக்குள்ளான பின்னர், அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பாரிய அளவில் கொரோனா பரவுவதனை அவதானிக்க முடிகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் பல இடங்களில் இவ்வாறான கொரோனா பரவல்கள் ஏற்படுவதனை நாங்கள் பார்க்கின்றோம்.

பிரதானமாக இலங்கை பொலிஸ் துறையிலும், சிறைச்சாலையிலும், கடற்படையிலும் கொரோனா பரவல்கள் ஏற்பட்டது.

இது எதிர்பார்க்க கூடிய விடயமாகும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நிறுவனத்தில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகினால் அது பரவலாக மாற கூடும்.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்துவதற்கு பாரிய அளவிலானோர் ஒன்று சேர்கின்றனர். தங்களின் நிறுவனத்தில் கொரோனா பரவலாக மாறுவதன தடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு நிறுவனத்தின் பிரதானிக்கே உள்ளதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

மட்டக்களப்பு கம்பஸின் கோரிக்கையை நிராகரித்த உயர்கல்வி அமைச்சு

அம்மு

மட்டக்களப்பு வெல்லாவெளியில் கைக்குண்டு மீட்பு

அம்மு

யாழில் சிவாஜிலிங்கம் கைது

அம்மு