செய்தி

யாழில் 22 வயது பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

தந்தை, தாய் வேலை நிமித்தம் வெளியில் சென்றிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தர்மகுலராசா மாருதி என்ற 22 வயது பெண்ணின் சடலமே வீட்டினுள் சாமி அறைக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நீதிமன்ற நீதவானின் பணிப்பின் பின்னர் தென்மராட்சி பிரதேசத்தின் திடீர் மரண விசாரணை அதிகாரி சி.தவமலர் விசாரணைகளை மேற்கொண்ட பின் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய நிபுணர் உடற்கூற்றுப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

யாசகரின் வங்கிக் கணக்கில் 140 மில்லியன் ரூபா!

அம்மு

ஜூன் 2 முதல் சபாநாயகர் வசமாகின்றது நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம்!

அம்மு

கடும் எதிர்ப்புக்களையடுத்து 20இல் மேலும் 3 திருத்தங்கள்! அமைச்சரவை அனுமதி

அம்மு