நாட்டில் மேலும் 268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்றார் எண்ணைகை 24000 ஐ கடந்துள்ளது.
இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 710 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 255ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று மட்டும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 257 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 17 817 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
அத்துடன், இன்னும் ஆறாயிரத்து 320 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை,இலங்கையில் இதுவரை 118 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Srilanka News Facebook :- Liked
Facebook Group :- Joined
Srilanka News Viber Group :- Joined
News Papers Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.