உலகம்

அது நிகழும்… தடுப்பூசியால் தடுக்க முடியாது: கொரோனா தொடர்பில் விஞ்ஞானி ஒருவர் எச்சரிக்கை

ரஷ்ய விஞ்ஞானி ஒருவர், தாமாகவே இருமுறை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி ஆய்வு மேற்கொண்டவர், தடுப்பூசிகள் பலன் தராமல் போக வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்ய விஞ்ஞானியான அலெக்சாண்டர் செப்பர்னோவ் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பாதிப்புக்கு இலக்கானார்.

தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த அவர், ஆய்வின் பொருட்டு மீண்டும் கொரோனா பாதிப்புக்கு இலக்கானார்.

தற்போது தமது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள அவர், கொரோனா பரவல் மீண்டும் ஏற்படலாம் எனவும், தடுப்பூசிகள் பலன் தராமல் போக வாய்ப்புகள் அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் மறுபடியும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாவது தொடர்பில் அரசாங்கங்கள் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள பேராசிரியர் அலெக்சாண்டர் செப்பர்னோவ்,

ரஷ்ய நிர்வாகம் இந்த விவகாரம் தொடர்பில் மெத்தனமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

மட்டுமின்றி, ரஷ்யாவின் முதன்மை சுகாதார தலைவராக செயல்பட்டுவரும் மருத்துவர் அன்னா போபோவா என்பவரை கடுமையாக விமர்சித்துள்ள பேராசிரியர் செப்பர்னோவ்,

இந்த விவகாரத்தில் அவர் கண்மூடித்தனமாக செயல்படுகிறார் என்றார்.

கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் மறுபடியும் பாதிப்புக்கு உள்ளாவது, மிகப்பெரிய ஆபத்தின் அறிகுறி என எச்சரித்துள்ள பேராசிரியர் செப்பர்னோவ், இப்போதே அதற்கான ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

ஆனால் பேராசிரியர் செப்பர்னோவ் வெளியிட்ட ஆய்வறிக்கை தொடர்பில் கடுமையாக விமர்சனம் முன்வைத்துள்ள போபோவா, பேராசிரியர் செப்பர்னோவ் ஒரு வயதான நபர், அவர் மிக விரைவில் குணமடைய வாழ்த்துகள் என்றார்.

மேலும், இந்த நிலைமையை நாங்கள் ஆராய்ந்தோம், இது உண்மையில் ஒரு மறுபாதிப்பு என்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் போபோவா சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசியே இறுதி நம்பிக்கை என காத்திருக்கும் நிலையில், தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய தவறினால் கொரோனா பாதிப்பு மீண்டும் ஏற்படும் என்பது விஞ்ஞானி செப்பர்னோவ் போன்றவர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கிராமங்களில்தான் விவசாயம் செய்ய முடியுமா… பாரீஸில் மொட்டை மாடியில் காய்கனிகளை விளைவிக்கும் ஒரு விவசாயப் புரட்சி!

அம்மு

மகன்களுக்கு ஒரு பைசா கொடுக்காமல் சொத்து முழுவதையும் மகளுக்கு உயில் எழுதி வைத்த தாய்… மகன்களின் அடுத்த கட்ட நடவடிக்கை!

அம்மு

உலக மக்கள் பலரின் நெஞ்சை உலுக்கிய புகைப்படம்! 330 யானைகளின் மரணத்திற்கு காரணம் கண்டுபிடிப்பு

அம்மு