செய்தி

இலங்கை முழுமையான பௌத்த நாடாக மாறுகிறதா? கோட்டாபய கூறியது

இலங்கையை முழுமையான பௌத்த நாடாக மயமாக்கப்படுவதற்கான ஏற்பாடுகள், பல்வேறு வழிகளில் மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை யாரும் அறியாதொன்றல்ல.

தமிழர் பகுதியில் பௌத்த விகாரைகள் அடாவடியாக எழுப்படுவதும், தமிழ் மக்களின் பாரம்பரிய தொல்பொருள் ஆதாரங்கள் கூட மக்கள் கண்முன்னே அழிக்கப்பட்டு கொண்டுதான் உள்ளன.

தற்போது, வார இறுதி சிங்கள பத்திரிகையொன்றிற்கு வழங்கிய செவ்வியிலே, இது சிங்கள பௌத்த அரசாங்கம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார் என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு உடனடியாக பதிலளித்த பஷில் ராஜபக்ஷ, சிங்கள பௌத்த அரசாங்கம் என ஜனாதிபதி கூறவில்லை தெரிவிக்கின்றார்.

இல்லை. யாரும் அவ்வாறு கூறவில்லை. ஜனாதிபதி அவ்வாறு கூறியதாக சமூக வலைத்தளங்களில் உள்ளவர்களும், வெளிநாடுகளில் உள்ளவர்களும் கூறுகின்றனர்.

பொறுப்புள்ள எவரும் அவ்வாறான கருத்தொன்றை முன்வைத்தார் என நான் நினைக்கவில்லை என பதிலளித்தார்.

”நான் சிங்கள பௌத்த வாக்குகளினாலேயே ஜனாதிபதியானேன்” என அநுராதபுரத்தில் பதவியேற்கும் போது, ஜனாதிபதி கூறியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தாம் அவ்வாறு கூறுவது உண்மை என தெரிவித்த பஷில் ராஜபக்ஷ, இந்த கட்சி அனைத்து இனத்தவர்களுக்கும், அனைத்து சமயங்களைச் சேர்ந்தவர்களும் சொந்தமான கட்சி எனவும் கூறினார். ”எனினும், இந்த கட்சியிலுள்ள பெரும்பாலானோர் பௌத்தர்கள்.

எமக்கு வாக்களித்த பெரும்பாலானோர் பௌத்தர்கள். அதில் மறைப்பதற்கு ஒன்றும் கிடையாது. தேர்தல் முடிவுகளின் ஊடாக அது வெளிப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலின் போதே தான் சிறுபான்மையினரின் வாக்குகளின்றி வெற்றி பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இலங்கையில் 14000 ஐ கடந்த கொரோனா நோயாளர்கள்

அம்மு

விமானி ஆவதே இலட்சியம்: முல்லைத்தீவில் முதலிடம் பிடித்த மாணவன்!

அம்மு

பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று – வைத்தியசாலையில் மூடப்பட்ட 5 வார்டுகள்

அம்மு