செய்தி

யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்தவர் மரணம்!

சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரைநகரில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டவரின் வீட்டுக்கு அண்மையில் வசித்த வந்த 60 வயதுடைய வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை முதல் உயிரிழந்தவர் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பின்னர் மூச்சுத் திணறல் காரணமாக அவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கோவிட் -19 நோய்த் தொற்று தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் குறிப்பேட்டின் படி குருதியின் அளவு அரைவாசியாகக் குறைந்ததால் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவரது இறப்புத் தொடர்பில் உடற்கூற்றுப் பரிசோதனையை செய்வதா? அல்லது பிசிஆர் பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பின்னர் உற்கூற்றுப் பரிசோதனையைச் செய்வதா? என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருகிறதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கர்ப்பிணிப் பெண் குண்டினை வெடிக்கச் செய்தது எப்படி? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சாட்சியத்தில் வெளியான பகீர் தகவல்

அம்மு

தனிச்சிங்கள கொடியை பறக்கவிட்டு முதன் நாளிலேயே வெளிப்பட்ட சிங்களத்தின் கோரமுகம்

அம்மு

என்னை விலை பேச கருணாவிடம் பணம் இல்லை! தவராசா கலையரசன்

அம்மு