செய்தி

வவுனியாவில் பாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம் வீட்டிற்கு அனுப்பி வைப்பு

வவுனியாவில் இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவி ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது குறித்து அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாணவி தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு சென்ற தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு பாடசாலையில் திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த மாணவி 11 மணியளவில் பாடசாலை அதிபரினால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இவ்விடயம் குறித்து அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கும் தகவல் வழங்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதனால் பாடசாலைக்கு எவ்விதமான இடையூறுகளும் இன்றி பாடசாலை இடம்பெற்று வருவதாகவும் பெற்றோர்கள் அச்சமடையத் தேவையில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அப்பகுதி சுகாதார பரிசோதகரிடம் தொடர்பு கொண்டபோது மாணவிக்கு சாதாரண காய்ச்சல் என்பதை தற்போது கூற முடியும் இது குறித்து நாங்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இலங்கையில் வேகமாக பரவும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ்

அம்மு

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான போராட்டத்திற்கு தமிழ் அரசு கட்சி வாலிபர் முன்னணியும் ஆதரவு!

அம்மு

வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமானவருக்கு மீண்டும் கொரோனா! சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளரின் அறிவித்தல்

அம்மு