செய்தி

அமைச்சரான தந்தைக்கு பொலிஸ் அதிகாரியான மகன் சல்யூட்

அமைச்சரான ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவிற்கு, பொலிஸ் அதிகாரியான அவரது புதல்வர் சசித்ர வீரசேகர சல்யூட் அடித்து மரியாதை செய்துள்ளார்.

பொதுப்பாதுகாப்பு மற்றும் உள்விவகார அமைச்சராக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர நேற்று பத்தரமுல்ல சுஹ_ருபாயவில் அமைந்துள்ள காரியாலயத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை நேற்று ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் அவரது புதல்வர் பொலிஸ் அதிகாரியாக கலந்து கொண்டிருந்தார். துணை பொலிஸ் அத்தியட்சகரான சசித்ர தனது தந்தையும் அமைச்சருமான சரத் வீரசேகரவிற்கு, அமைச்சருக்கு வழங்கும் மரியாதை முறைமைகளின் அடிப்படையில் சல்யூட் அடித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்னவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

ராஜபக்சக்கள்தான் முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்த எதிரி – அஸாத் ஸாலி

அம்மு

நாடாளுமன்றம் வரும் முன் அமெரிக்கப் பிரஜாவுரிமை இரத்துச் செய்கின்றார் பஸில்?

அம்மு

120 ரூபாயை கடந்த தேங்காய் விலை

அம்மு