செய்தி

இலங்கையில் சிறுமிகள் எதிர்நோக்கும் பரிதாப நிலைமை

இலங்கையில் ஒரு வருடத்தில் சுமார் 50 சிறுமிகள் தமது சிறு பராயத்தில் பிள்ளைகளுக்கு தாய்களாக மாறுவதாக கண்டறியப்பட்டுள்ளது என காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்தியம் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் ருவான் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் ஒரு வருடத்தில் 10 ஆயிரம் சிறார் துஷ்பிரயோகங்கள் நடப்பதாக 25 மாவட்டங்களில் உள்ள சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அலுவலங்களுக்கு முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த மாவட்டங்களில் மொனராகலை, பொலன்நறுவை, அனுராதபுரம் போன்ற மாவட்டங்களில் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகமாக நடப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் தொந்தரவுகள் காரணமாக மொனராகலை மாவட்டத்தில் சுமார் 500 சிறுமிகள் தமது பாடசாலை கல்வியை இடை நடுவில் நிறுத்துகின்றனர். மொனராகலை மாவட்டத்தில் வருடத்தில் சுமார் 10 சிறுமிகள் பிள்ளைகளுக்கு தாய்களாக மாறும் நிலைமை காணப்படுகிறது.

இவ்வாறு சிறிய வயதில் கர்ப்பமுறும் சிறுமிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கும் காப்பகங்கள் எந்த வைத்தியசாலைகளிலும் இல்லை.

துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் மற்றும் வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்கு சட்ட ரீதியான உதவிகளை உதவிகளை வழங்கி, அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி, சமூகத்துடன் இணைக்கும் பின்னணி உருவாக்கப்பட வேண்டும்.

துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் மற்றும் சிறிய வயதில் பிள்ளைகளை பெறும் சிறுமிகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க வைத்தியசாலை வசதிகள் இருக்கின்றன.

எனினும் கர்ப்பமாகும் சிறிய பெண் பிள்ளைகளுக்கான நிரந்த விடுதிகள் இல்லை. இதனால், நீண்டகால சிகிச்சை, பாதுகாப்பை வழங்கி, மனநிலையை சிறந்த நிலைமைக்கு மாற்றி, பாதுகாப்பான வசதிகளை வழங்க உரிய நடைமுறைகளை உருவாக்க இன்னும் முடியாது போயுள்ளது எனவும் மருத்துவர் நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

நாடு முழுவதும் மாவட்டரீதியாக தெரிவான எம்.பிக்கள்!

அம்மு

விக்னேஸ்வரனின் கருத்தை எதிர்ப்பவர்கள் உண்மையான வரலாற்றை நாட்டு மக்களுக்குச் சொல்லத் தயாரா?: சுரேஷ் ‘சுளீர்’!

அம்மு

எஸ்.பி.பியை கடைசியாக சந்தித்த மிக முக்கியஸ்தர் கூறிய நெகிழ்ச்சியான தகவல்கள்

அம்மு