உலகம்

கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் கல்லறையைச் சுற்றி 200 பொலிசார்: காரணம் இதுதான்

மரடோனாவின் கல்லறையைச் சுற்றி 200 பொலிசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட உள்ளார்கள்.

மூளையில் உருவான ஒரு இரத்தக்கட்டியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட மரடோனாவுக்கு (60), அதைத் தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார்.

அவரது மரணத்தைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், கண்ணீர் விட்டுக் கதறும் காட்சிகளை ஊடகங்களில் காண முடிந்தது.

மேலை நாடுகளில் பிரபலங்கள் உயிரிழக்கும்போது, அவர்களது உடல் பாகங்களை சேகரித்து வைக்கும் வெறி கொண்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அப்படி யாராவது மரடோனாவின் கல்லறையை உடைத்து, அவரது உடல் பாகம் எதையாவது அகற்றி, நினைவுச் சின்னமாக பாதுகாக்க முயற்சி செய்யலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

ஆகவே, அப்படி ஏதாவது நடந்துவிடக்கூடாது என்பதற்காக அவரது கல்லறையை பாதுகாக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.

ஆகவே, மரடோனாவின் கல்லறையைச் சுற்றி, பாதுகாப்புக்காக 200 பொலிசார் நிறுத்தப்பட உள்ளார்கள்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

டிக்கெட் வாங்காமல் பயணித்த பயணி… பரிசோதகர் செய்த பயங்கர செயல்: அதிர்வுகளை ஏற்படுத்திய வீடியோ!

அம்மு

முகக்கவசம் அணியுங்கள் அல்லது ரூ. 30 ஆயிரம் அபராதம் – பிரேசில் அதிபருக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

அம்மு

25 மில்லியன் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்…35 மில்லியன் பேர் ஆபத்தில்! உண்மையை அம்பலப்படுத்திய ஜனாதிபதி

அம்மு