கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் கல்வி நடவடிக்கைக்காக நாளையதினம் திறக்கப்படவுள்ளது.
மேல மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர்த்து ஏனைய பிரதேசங்களில் நாளைய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளது.
அதற்கமைய இரண்டாம் தரம் முதல் 13ஆம் தரம் வரையிலான கல்வி நடவடிக்கைகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிக்காட்டல்களுக்கமைய பாடசாலை கல்வி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
சுகாதார பரிந்துரைகள் அனைத்தும் பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார பரிந்துரைகள் உரிய முறையில் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்துவதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் கொரோனா தொற்று காரணமாக வவுனியா நகர பாடசாலைகளை நாளைய தினம் திறக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரு வார காலப்பகுதிக்கு பாடசாலைகளை மூடி மாணவர்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வவுனியா வலய கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Srilanka News Facebook :- Liked
Facebook Group :- Joined
Srilanka News Viber Group :- Joined
News Papers Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.