செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மீள அடிக்கல்; சட்டபூர்வமாக கட்டப்படும் என்று உறுதிமொழி!

இடித்தழிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை சட்டபூர்வமாக அமைப்பதாக தெரிவித்து இன்று (11) காலை 7 மணிக்கு பல்கலை துணைவேந்தரால், இடிக்கப்பட்ட தூபி இருந்த இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.

சட்டபூர்வமாக அங்கீகாரம் பெற்று முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்கவுள்ளதாக பல்கலை துணைவேந்தரால் உறுதியளிக்கப்பட்டது. அதன்படி அவரால் அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கி 3வது நாளாக தொடர்ந்த மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்தையும் துணைவேந்தர் முடித்து வைத்துள்ளார்.

இதேவேளை இன்று காலை 7 மணிக்கு துணைவேந்தர், மாணவர்களுடன் பல்கலைக்கழத்தினுள் செல்ல முற்பட்ட போது பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
அதனையும் மீறி துணைவேந்தர் மாணவர்களை அழைத்துக்கொண்டு வளாகத்தினுள் சென்று பரமேஸ்வரன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார்.
தொடர்ந்து நினைவு தூபி இடித்தழிக்கப்பட்ட இடத்திற்கு மாணவர்களுடன் துணைவேந்தர் சென்ற போது அங்கு வந்திருந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அதன்போது , துணைவேந்தர், நாம் தற்போது எந்த கட்டுமான பணிகளிலும் ஈடுபடவில்லை. தூபி இடித்தழிக்கப்பட்ட இடத்தில் கல் நாட்டப்போறோம். என்னுடைய மாணவர்கள் மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை முடித்து வைக்க வேண்டிய நிலையில் உள்ளேன். எம்மை தடுக்காதீர்கள் என கூறி இருந்தார்.
அதனையடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி அவர்களை நினைவிடத்திற்கு செல்வதற்கு அனுமதியளித்தார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கொரோனா பரவல் தீவிரம் – மற்றுமொரு நகரம் முடக்கம்

அம்மு

கொழும்பில் இரகசியமாக தொழுகையில் ஈடுபட்டவர்கள் கைது! வெளியானது வீடியோ

அம்மு

தன்னுடைய கழுத்தை தானே நெரித்து தற்கொலை செய்த கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண்! நடந்ததை விவரித்த தந்தை

அம்மு