சினிமா

லொஸ்லியாவை லவ் பண்றேன்னு சொன்னார்; பிரபல நடிகரை மாட்டிவிட்ட ஹர்பஜன் சிங்

பிக்பொஸ் மூலம் மிகவும் பிரபல்யம் அடைந்தவர் லொஸ்லியா மரியநேசன். இவர் தற்பொழுது ஹர்பஜன் சிங் உடன் படம் ஒன்றை நடித்து வருகின்றார்.

தற்பொழுது லொஸ்லியா தொடர்பில் ஹர்பஜன் சிங் மற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷின் ட்விட்டர் உரையாடல்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.

மேலும் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கித் தயாரிக்கும் படம் ஃப்ரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். வில்லனாக பிரபல நடிகர் அர்ஜூனும், நகைச்சுவை கேரக்டரில் சதீஷூம் நடிக்கின்றனர்.

அத்தோடு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிய ஹர்பஜன் சிங் தனது தமிழ் ட்வீட்டுகளால் தமிழகத்தில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.

மேலும் இந்நிலையில் ஃப்ரெண்ட்ஷிப் படத்தில் ஹீரோவாக ஹர்பஜன் சிங்கும் வில்லனாக அர்ஜூனும் நடித்து வருவதால் படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் சதீஷ் ஃபிரெண்ட்ஷிப் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, என்றும் தொடரும் இந்த நட்பு. லவ் யூ ஹர்பஜன், லாஸ்லியா என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் சதீஷின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த நடிகர் ஹர்பஜன் சிங், “மச்சி என்ன இப்பிடி பச்சயா பொய் சொல்ற நீ லாஸ்லியாவை தான லவ் பன்றேன்னு சொன்ன. அன்னிக்கு இந்த விஷயம் தெரியுமா ?? நம் நட்பு என்றும் தொடரும் தோழா” என்று கூறினார்.

இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த நடிகர் சதீஷ், “அய்யய்யோ எனக்கே இந்த விஷயம் இப்பதான தெரியும். லாஸ்லியாவை ஒரு தோழியாக லவ் யூ என்று சொன்னேன்” என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

அத்தோடு ஹர்பஜன் சிங் – நடிகர் சதீஷ் இடையேயான இந்த நகைச்சுவையான பதிவுகள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

நடிகை சித்ரா தற்கொலையில் சிக்கும் அரசியல் பெரும் புள்ளிகளின் வாரிசுகள்; வெளியான பரபரப்பு தகவல்

அம்மு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர், யார் தெரியுமா..

அம்மு

நடிகர் விஜய்யின் திரைப்படங்களை எந்தெந்த மொழியில் இதுவரை ரீமேக் செய்துள்ளனர் தெரியுமா? இதோ

அம்மு