சினிமா

மனைவியை விவாகரத்து செய்ததற்கு காரணம் ஷிவானியா? முதன் முறையாக மனம் திறந்த அஸீம்

பகல் நிலவு சீரியல் நடிகர் அசீம் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக வெளியிட்டுள்ள பதிவு ஒட்டுமொத்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு போன்ற பல வெற்றி சீரியல்களில் அவர் நடித்துள்ளார்.

இவருக்கு ஜோடியாக நடித்த அசீம் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக செல்வதாக கூறப்பட்டது..

இதற்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அசீம், தனிப்பட்ட காரணத்தினால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லமுடியவில்லை மன்னித்துவிடுங்கள் என்று ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் அஸீம் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இவரின் விவாகரத்திற்கு ஷிவானி மீது ஏற்பட்ட காதல் என்று பலரும் கூறிவந்த நிலையில், தற்போது இதுகுறித்து முதன்முதலாக விளக்கம் கொடுத்துள்ளார் நடிகர் அசீம்.

இது குறித்து விளக்கமளித்துள்ள அசீம், ஷிவானியுடன் பகல் நிலவு சீரியல் ஜோடியாக நடித்தேன். அதன் பின்னர் ஜோடி நிகழ்ச்சியில் நாங்கள் ஒன்றாக இணைந்து நடனமாடி இருக்கிறோம். அதேபோல கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் இருவரும் சேர்ந்து நடித்தோம் .

அந்த சமயத்தில் நாங்கள் இருவரும் ரொமான்டிக் ஜோடி என்ற ரீதியில் பல விருதுகளை வாங்கினோம். உடனே நாங்கள் இருவரும் காதலிப்பதாக பேச்சிகள் கிளம்பியது. உண்மையில் எனக்கும், ஷிவானிக்கும் தொழில் ரீதியான தொடர்பை தவிர வேறு எந்த தொடர்பும் கிடையாது.

சில நாட்களுக்கு முன்னர் தான் எனக்கு விவாகரத்து கிடைத்தது. நான் தற்போது டிவோர்சீ. இதை வைத்து ஷிவானியிடன் நான் திருமணம் செய்யப்போகிறேன் என்று கிளப்பி விடுகிறார்கள்.

மேலும்,ஷிவானிகாக தான் என்னுடைய மனைவியை விவாகரத்து செய்தேன் என்று கூட பேசுகிறார்கள். அந்த பெண்ணையும் நிம்மதியா இருக்க விடுங்க என்னையும் நிம்மதியா நடிக்க விடுங்க என்று புலம்பியிருக்கிறார் அஸீம்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா!! எவ்வளவு தெரியுமா..

அம்மு

பிக்பாஸ் புகழ் சினேகனால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்- கடும் சோகத்தில் குடும்பம்

அம்மு

பார்க்கவே முடியாத படி வந்த தல அஜித் 5 படங்கள், ரசிகர்களே கதறிய லிஸ்ட் இதோ

அம்மு