இந்தியா

இளம் பெண்ணை ஓடும் ரயிலுக்கு அடியில் தள்ளிவிட்டு கொல்ல முயன்ற இளைஞர்: நடுங்க வைத்த சம்பவம்

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம் பெண்ணை ஓடும் ரயிலுக்கு அடியில் தள்ளிவிட்டு கொல்ல முயற்சி.

தலையில் பலத்த காயமுடன் மீட்கப்பட்ட இளம் பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 24 வயது இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அந்தேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் இளம் பெண்ணை, சக ஊழியரான இளைஞரே கொல்ல முயன்றுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக பின்னர் இருவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.

வெள்ளிக்கிழமை பணி முடித்து குடியிருப்புக்கு திரும்பிய இளம் பெண்ணை தொடர்ந்து சென்ற இளைஞர் கார் ரயில் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளார்.

இதனிடையே, இளைஞர் தம்மை தொடர்வதாக அறிந்த இளம் பெண், ரயில் நிலையத்தில் தமது தாயாரை காத்திருக்க தகவல் அளித்துள்ளார்.

இதே வேளை, இளைஞர் அந்த இளம் பெண் மீது தாக்க முயல, தாயாரும் மகளும் சேர்ந்து தடுக்க முயன்றுள்ளனர்.

இந்த காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. நடைபாதையில் தடுமாறி விழுந்த இளம் பெண்ணை, அந்த இளைஞர் தண்டவாளம் மீது இழுத்துச் சென்றுள்ளார்.

அப்போது கடந்து சென்ற ரயில் ஒன்றில் தலை மோதியதால் பலத்த காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் உதவிக்கு நெருங்கிய நிலையில், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியுள்ளார். பின்னர் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கணவனை பழிவாங்க பேஸ்புக்கில் ஆபாச படங்களை பதிவிட்ட மனைவி! எதற்காக? அதிரவைக்கும் பின்னணி

அம்மு

ஊரடங்கு முடிந்து வீட்டுக்கு மனைவி 3 குழந்தையுடன் திரும்பிய கணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! தற்கொலையை தவிர வழியில்லை என கண்ணீர்

அம்மு

சிறுமிகளை விளையாட வீட்டிற்கு அழைத்துச் சென்ற 9-ஆம் வகுப்பு மாணவர்களின் அதிர்ச்சி செயல்! கைது செய்த பொலிசார்

அம்மு