இலங்கையில் அண்மைய காலப்பகுதியில் சீன அரசாங்கத்தினதும், சீன மொழியினதும் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. சிங்களம், ஆங்கிலம், தமிழ் மொழி என எழுதப்பட்ட இடங்களில் தற்போது தமிழ் மொழியை காண முடியவில்லை.
இலங்கையில் தமிழ் மொழி அரசகரும மொழியாக கடந்த அரசாங்கத்தில் அங்கீகரிக்கப்பட்டது. எனினும் தற்போது தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதையும், அதற்கு பதிலாக சீன மொழி திணிக்கப்படுவதையும் காணலாம்.
இது தொடர்பில் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
கடந்த காலங்களில் இடங்களுக்குரிய பெயர் பலகையில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி எழுதப்பட்டு இருக்கும்.
ஆனால் தற்போது சிங்களம், ஆங்கிலம், சீன மொழி காணப்படுகின்றது. அதிலும் ஏனைய மொழிகளை விட சீன மொழியே மேலாக முதலில் எழுதப்பட்டுள்ளது.
பெயர் பலகை மாத்திரம் அல்லாது பேருந்துகளிலும் சீன மொழியே எழுதப்பட்டுள்ளது.
இலங்கையில் சீனர்களை விட ஏனைய மொழி பேசுபவர்களே அதிகமாக உள்ளனர். எனினும் சீன மொழிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்பது கேள்விக்குரிய விடயமே.
அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றது என்பதை விடவும், தமிழ் மொழி முற்றிலும் தவறுதலாக எழுதப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமே.
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Srilanka News Facebook :- Liked
Facebook Group :- Joined
Srilanka News Viber Group :- Joined
News Papers Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.