வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 423 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 5 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பூநகரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வலைப்பாடு கிராமத்தில் மேலும் இரண்டு பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் ஏற்கனவே தொற்று உள்ளமை கண்டறியப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள்.
மன்னார் நகரைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை இன்றைய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஏற்கனே தொற்று உள்ளவர்களுடன் நேரத் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 329 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கையிடப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Srilanka News Facebook :- Liked
Facebook Group :- Joined
Srilanka News Viber Group :- Joined
News Papers Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.