யாழ்ப்பாணம், நாவற்குழிக்கும் செம்மணிக்கும் இடைப்பட்ட பகுதியில் மாலைவேளையில் பயணிப்பவர்களை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல் இன்று மாலை மடக்கிப்பிடிக்கப்பட்டது.
நாளாந்தம் மாலை வேளையில் தனியே பயணிப்பவர்களை வழிமறிக்கும் நால்வர் கொண்ட கும்பல் தமது வாகனத்திற்கு பெற்றோல் இல்லை என்று தெரிவித்து பணம் தருமாறு மிரட்டல் பாணியில் பணம் பறிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்திருக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்ந்தும் நடைபெற்று வந்த நிலையில், நாவற்குழி இளைஞர்கள் ஒன்றிணைந்து இன்று குறித்த நபர்களை சுற்றிவளைத்திருக்கின்றனர்.
அவ்வேளை அந்தப் பகுதிக்குச் சென்ற இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரும் சுற்றிவளைத்த இளைஞர்களிடம் நடந்த சம்பவம் தொடர்பில் கேட்டிருக்கின்றனர்.
பணம் பறிக்கும் நடவடிக்கை குறித்து அவர்கள் விளக்கமறித்த நிலையில், சுற்றிவளைக்கப்பட்ட நால்வரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதே வகையிலான பணம் பறிக்கும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தின் பலாலி வீதி உட்பட்ட பல முக்கிய வீதிகளிலும் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Srilanka News Facebook :- Liked
Facebook Group :- Joined
Srilanka News Viber Group :- Joined
News Papers Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.