உலகம்

கைகட்டி வேடிக்கை பார்க்க தயாராக இல்லை.. இனி இது தான் கதி! பிரபல நாட்டிற்கு ஜேர்மனி கடும் எச்சரிக்கை

மியான்மர் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கக்கூடும் என ஐரோப்பிய நாடான ஜேர்மனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆசிய நாடான மியான்மரில் பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து மியான்மர் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றி, ஆளும் அரசாங்க தலைவர்களை கைது செய்து, அவசரகால நிலையை அறிவித்ததில் இருந்து நாட்டில் நிலைமை பதட்டமாக உள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய மியான்மர் இராணுவம், ஆளும் கட்சி தலைவர் ஆங் சான் சூ கி, ஜனாதிபதி Win Myint மற்றும் பிற மூத்த அதிகாரிகளை கைது செய்து சிறைபிடித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அதிலிருந்து மியன்மார் இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு எதிராக நாட்டில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடந்து வருகிறது

பொலிஸாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையிலான மோதல்களில் ஏற்கனவே குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர், பொலிசார் போராட்டகாரர்களை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மியான்மரில் நடப்பதை கைகட்டி வேடிக்கை பார்க்கத் தயாராக இல்லை என ஜேர்மனி வெளியுறுவுத் துறை அமைச்சர் Heiko Maas கூறியுள்ளார்.

அதிகபட்சமாக மியான்மருக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கக்கூடும் என Heiko Maas எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இங்கு கொரோனா தொற்று அதிகரிக்கிறது! ஆனால் இறப்புகள் இல்லை…. அறிவித்துள்ள நாடு

அம்மு

பிரித்தானியாவிலிருக்கும் இவரது சிலையையும் அகற்றவேண்டும்: மனுவில் நூற்றுக்கணக்கானோர் கையெழுத்திட்டனர்!

அம்மு

பட்டப்பகலில் பட்டாக்கத்தியுடன் நின்ற நபர்: லண்டன் தெரு ஒன்றில் பரபரப்பு

அம்மு