சீனா மீதான வர்த்தக தடைகளை நீக்கவேண்டும் என்றும் பிற நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையிலான பிரச்சினைகளில் தலையிடவேண்டாம் எனவும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் Wang Yi அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளார்.
சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் முந்தைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விதித்த பல வர்த்தக தடைகள் மற்றும் மோதல் நடவடிக்கைகளைக் கைவிடுமாறு தற்போதைய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்திற்கு சீன அரசு அழுத்தம் கொடுத்துவருகிறது.
இந்நிலையில், சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் Wang Yi இன்று அமெரிக்காவுக்கு மீண்டும் ஒரு அழைப்பை விடுத்துள்ளார்.
தைவான், ஹாங்காங், சின்ஜியாங் மற்றும் திபெத் ஆகிய நாடுகளுக்கு இடையேயான சீனாவின் பிரச்சினைகளில் அமெரிக்கா தேவையின்றி தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என Wang Yi கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் “வர்த்தகத்தில், அமெரிக்கா அமெரிக்க நிறுவனங்களின் உரிமைகளை சீனா பாதுகாக்கும், அதே நேரத்தில் அமெரிக்கா அதன் கொள்கைகளை சீக்கிரம் சரிசெய்து சீனப் பொருட்களின் மீதான நியாயமற்ற கட்டணங்களையும், சீன நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் மீதான ஒருதலைப்பட்ச தடைகளையம் நீக்கவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
அப்போது தான், COVID-19 தொற்றுநோய், காலநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மீட்சி ஆகிய மூன்று பெரிய பிரச்சினைகளில் சீனா ஒத்துழைக்க முடியும் என்றார்.
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Srilanka News Facebook :- Liked
Facebook Group :- Joined
Srilanka News Viber Group :- Joined
News Papers Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.