டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பை பெற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று சீசன் 2 ஆக வளர்ந்துவிட்டது.
இந்த சீசனில் பங்கேற்று மக்களை மிகவும் கவர்ந்த நபர் ஷிவாங்கி. நல்ல குரல் வளம் நிறைந்த இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பாடினார். இது இவருக்கு மேலும் பக்க பலமானது.
கடந்த முறை கோமாளியாக இருந்தவர்கள் இந்த முறையும் பங்கேற்றுள்ளனர். இதனால் காமெடிக்கு பஞ்சமே இல்லை. ஷிவாங்கிக்கு கிடைத்த வரவேற்பால் அவருக்கு சினிமா படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த 2017 ல் தான் இன்ஸ்டாகிராமில் ஷிவாங்கி கணக்கு தொடர்ந்தார். டிசம்பர் 2020 ல் அவரை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 1 மில்லியனாக உயர்ந்தது.
ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் 1 மில்லியனாக உயர்ந்து மொத்தம் 2 மில்லியனாகிவிட்டது. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலங்களாக அஸ்வின் என்பவரை 1.3 மில்லியன் பேரும், புகழ் என்பவரை 1.2 மில்லியன் பேரும் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகின்றனர்.
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Srilanka News Facebook :- Liked
Facebook Group :- Joined
Srilanka News Viber Group :- Joined
News Papers Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.