வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் என நாம் வெளியில் சென்று வரும் பொழுது அவற்றால் ஏற்படும் நோய்த்தொற்று அவர்களை மிக அதிக அளவில் பாதிக்கும். இதனை போக்க சூடான தண்ணீரில் சில மூலிகைகளை சேர்த்து ஆவி பிடிப்பதால் நம்முடைய நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகள் வெளியேறிவிடும்.
முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும். ஒரு வேளை மாற்றி பயன்படுத்திவிட்டால், அதனால் தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது.
உலகம் முழுதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற சீன மருத்துவர்கள் பின்பற்ற சொல்வதும், இந்த ஆவி பிடிக்கும் முறையை தான். கொரோனா வைரஸ் முதலில் தாக்குவது, தொண்டையை தான். அதிலிருந்து தான் நுரையீரலை பதம் பார்க்க தொடங்கும். ஆகவே, கொரோனா வைரஸை தொண்டையிலேயே அழிக்கும் விதமாக ஆவி பிடிக்கும் முறையை பின்பற்ற தொடங்கிவிட்டனர்.
ஆவி பிடிப்பதால் சளி, காய்சல், தலைவலிமட்டும் குணமடைவதோடு, ஆவி பிடித்தால் சருமம் பொலிவு பெறுவதுடன் இளமையையும் தக்க வைக்கலாம்.
முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்க
முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.
கரும்புள்ளிகள் மறைய
கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.
இரத்த ஓட்டம் சீராக
ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.
சளி, காய்சல் நீங்க
ஆவி பிடிப்பதால் சளி, காய்சல், தலைவலிமட்டும் குனமடைவதில்ல; ஆவி பிடித்தால் சருமம் பொலிவு பெறுவதுடன் இளமையையும் தக்கவைக்கலாம் என்று கூறினால் நம்ப முடிகிறதா?. ஆனால், அதுதான் உண்மை.
அழுக்குகளை நீக்க
ஆவி பிடிப்பதால் முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அவ்வப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Srilanka News Facebook :- Liked
Facebook Group :- Joined
Srilanka News Viber Group :- Joined
News Papers Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.