கோடைக் காலத்தை குளுமையாக்கிக் கொள்வதற்கு, இயற்கை அள்ளித்தந்த வரப்பிரசாதம் கற்றாழை.
கற்றாழைக்குக் கன்னி, குமரி என்ற பெயர்களும் உண்டு. கற்றாழையில் சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, செங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, வரிக்கற்றாழை எனப் பல வகை உண்டு.
இவற்றில் சோற்றுக்கற்றாழை மட்டுமே மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது.
தண்ணீர் அதிகம் இல்லாத வறண்ட வெப்பநிலையிலும் பல ஆண்டுகள் வாழும் செடி இது என்பதால் கிராமங்களில் மட்டுமல்ல தற்போது நகரங்களிலும் சோற்றுக்கற்றாழை விருப்பமாக வளர்க்கப்படுகிறது.
அழகு சாதனப் பொருட்கள், மருந்துகள் போன்றவற்றைக் கற்றாழையிலிருந்து தயாரித்துவருகிறார்கள்.
இதனை அடிக்கடி சாப்பிட்டு வருவதனால் உடலுக்கு பல ஆரோக்கிய பலன்களை அள்ளி வழங்குகின்றது.
அந்தவகையில் கற்றாழையை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் பயன்கள் என்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

- தோல் நீக்கிய கற்றாழை தண்டுகளை சிறிதளவு மென்று சாப்பிட்டு வந்தால் ஈறுகள் பலம் பெறும். பற்களில் சொத்தை ஏற்படுத்தும் கிருமிகளை அழிப்பதிலும் கற்றாழை உதவுகிறது.
- தினமும் காலையில் சிறிதளவு தோல் நீக்கிய கற்றாழையை ஜூஸ் போட்டோ அல்லது அப்படியே மென்று சாப்பிட்டு வந்தாலோ மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல்கள் போன்ற ஜீரண உறுப்புகளில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
- கற்றாழையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல்நலத்தை மேம்படுத்துகிறது.
- நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை சாறு மருந்தாக உட்கொள்ள நமது பாரம்பரிய மருத்துவத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆரோக்கியமான செல்களை உடலில் வளர்ச்சி பெற செய்யும் ஆற்றல் கற்றாழைக்கு உண்டு.
- கற்றாழைச் சாற்றுடன் பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்துக் குடித்தால் எந்த மருத்துவத்துக்கும் அசராத வறட்டு இருமல் நம்மை விட்டு வேகமாக விலகும்.
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Srilanka News Facebook :- Liked
Facebook Group :- Joined
Srilanka News Viber Group :- Joined
News Papers Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.