வீட்டில் அல்லது கோவிலில் பூஜைக்கு கொடுத்த தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அபசகுனம் என சிலர் கூறுவார்கள்.
உண்மையிலேயே அழுகிய தேங்காய் நல்லதா? கெட்டதா என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
- தேங்காய் உடைக்கும் பொழுது அழுகி இருந்தால் தேவையில்லாத பயம், குழப்பம், கலக்கம், ஏமாற்றம் அடைந்ததாக எண்ணிக் கொள்வார்கள்.
- ஒரு சிலர் நடக்கக்கூடாதது நடந்துவிட்டதை போல தானும் பயந்து மற்றவர்களையும் பயமுறுத்துவார்கள்.
- ஆனால், உடைக்கும் போது அழுகிய தேங்காய் வருவது நல்ல அறிகுறி என்றும். உங்களை அண்டி இருக்கும் தீய சக்திகள், பீடை, கண்திருஷ்டி போன்றவை அகன்று போகிறது என்பதன் நல்ல அறிகுறி தான் இது என கூறப்படுகிறது.
- கோவிலில் சாமிக்கு படைக்கும் தேங்காய் மட்டும் அழுகக்கூடாது. காரணம் அழுகிய தேங்காயை சாமிக்கு படைக்க கூடாது என்பது மட்டுமே பொருள். மற்றபடி அது அபசகுணம் அல்ல.
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Srilanka News Facebook :- Liked
Facebook Group :- Joined
Srilanka News Viber Group :- Joined
News Papers Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.