செய்தி

யாழில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மேலும் 7 பேருக்குக் கொரோனா!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட மேலும் 7 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடங்களில் 588 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ். மாநகரின் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்குக் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர். ஏனைய இருவரும் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்.

அத்துடன், சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த இருவருக்கும், தெல்லிப்பளை வைத்தியசாலையில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது” – என்றார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

வவுனியாவில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு சென்ற பேருந்துக்கு நேர்ந்த கதி!

அம்மு

உணவின்றி இறக்கப்போகும் அபாயநிலையில் முல்லைத்தீவு மக்கள்!

அம்மு

பிரிட்டிஸ் இராணுவத்தில் பணியாற்றிய இலங்கையர் 102 ஆவது வயதில் உயிரிழப்பு

அம்மு