செய்தி

ரணில், சஜித், சம்பந்தன் அணிகளின் கருத்துக்கள் விஷமத்தனமானவை – விமல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் போர் வெற்றி விழா உரையால் நாட்டுக்கு ஆபத்து என்று ரணில், சஜித், சம்பந்தன் அணிகள் விஷமத்தனமான கருத்துக்களை வெளியிடுவது சிறுபிள்ளைத்தனமானது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரான அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்.

“எம்மை மீறி எம் மீது சர்வதேசம் கைவைக்க முடியாது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போர் வெற்றி விழாவில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். படையினரின் தியாகங்களை அவமதிக்க விடமாட்டார் என்பதையும், படையினர் மீது சர்வதேசம் வாய்க்கு வந்த மாதிரி குற்றச்சாட்டுக்களைச் சுமத்த முடியாது என்பதையும் ஜனாதிபதி அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.

எனவே, இனிமேலும் சர்வதேசம் எம்மையும் படைவீரர்களையும் எமது தாய்நாட்டையும் மிரட்ட முடியாது.

அப்படி மிரட்டினால் சர்வதேச அமைப்புகளின் உறுப்புரிமையிலிருந்து நாட்டை விலக்கிக்கொள்வார் ஜனாதிபதி. இந்தநிலையில், ஜனாதிபதியின் போர் வெற்றி விழா உரையால் நாட்டுக்குத்தான் ஆபத்து என்று ரணில், சஜித், சம்பந்தன் அணிகள் விஷமத்தனமான கருத்துக்களை வெளியிடுவது சிறுபிள்ளைத்தனமானது” – என்றார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

Facebook Group :- Joined

Viber Group :- Joined

News Papers Group :- Joined

Jobs Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராகிய ஈழத் தமிழ் பெண்

அம்மு

பாடசாலை மாணவர்களுக்கான சிரூடை வவுச்சரை இரத்துச் செய்த கோட்டாபய

அம்மு

எனது தோல்வியை முன்னரே அறிந்திருந்தேன்! உண்மையை வெளிப்படுத்திய மஹிந்த

அம்மு