செய்தி

விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் பிரசாரங்களை மேற்கொண்ட நபர் கைது – அஜித் ரோஹன

தகவல் விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான பிரசாரங்களை மேற்கொண்டு வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸார் இந்த நபரை கைது செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள நிலைமையில், இந்த சந்தேக நபர் இணையத்தளம் ஊடாக அந்த அமைப்பு தொடர்பான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஏறாவூர் செங்கலடி பிரதேசத்தில் வசித்து வந்த 56 வயதான விக்டர் மோகன் என்று அழைக்கப்படும் நவநீதன் பிள்ளை மோகன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து கைடக்க தொலைபேசி, எபல் ஐ பேட் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த நபருக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் சுமார் 14 வழக்குகள் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நபரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் முரண்டு பிடிக்கும் கொவிட் தொற்றாளர்கள் – அள்ளிச் செல்ல தயாராகும் இராணுவம்

அம்மு

திருகோணமலையில் கட்டிய மனைவிக்கு போதை மருந்து கொடுத்த கணவன்; அதன்பின்னர் நேர்ந்த கொடூரம்!

அம்மு

யாழ்.பல்கலைகழக வளாக புதிய முள்ளிவாய்க்கால் முற்றம் தொடர்பில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

அம்மு