உலகம்

ஒரு மாதத்தில் 4 தடவைகள் திருமணம் செய்த தம்பதி

தாய்வானிலுள்ள ஒரு தம்பதியினர், திருமண விடுமுறை சலுகைகளை கூடுதலாக அனுபவிப்பதற்காக சுமார் ஒரு மாத காலத்தில் 4 தடவைகள் திருமணம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தாய்வான் சட்டங்களின்படி, தம்பதியினர் திருமணம் செய்துகொள்ளும்போது அவர்களுக்கு 8 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். இந்நிலையில் ஒரு தம்பதியினர் அதிக நாட்கள் இவ்விடுமுறையை அனுபவிப்பதற்காக 4 தடவைகள் திருமணம் செய்துள்ளனர்.

இவர்கள் 37 நாட்களில்; 3 தடவைகள் விவகாரத்து செய்ததுடன் 4 தடவைகள் திருமணம் செய்தனர். இதனால் ஒவ்வொரு திருமண வைபவத்தின் பின் தலா 8 நாட்கள்.

அதாவது மொத்தமாக 32 நாட்கள் விடுமுறையை இவர்கள் கோரினர். இவ்விடுமுறையை வழங்க மறுத்தமைக்காக குறித்த வங்கிக்கு தாய்லாந்து தொழில் திணைக்களம் 20,000 தாய்வான் டொலர்கள் (சுமார். 1.4 இலட்சம் ரூபா) அபராதம் விதித்தது.

ஏனெனில்;, தாய்வான் சட்டங்களின்படி எத்தனை தடவைகள் இத்தகைய விடுமுறையை பெறலாம் என வரையறை செய்யப்படவில்லை.

எனினும், பின்னர், மேற்படி தம்பதியின் மோசடியை உணர்ந்து வங்கிக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை தாய்வான் தொழில் திணைக்களம் வாபஸ் பெற்றது.

Related posts

இந்த பொருட்களை வாங்க வேண்டாம்: பிரித்தானியாவின் பிரபல ஐஸ்கிரீம் நிறுவனம் வேண்டுகோள்

அம்மு

பிரித்தானியா அரண்மனையிலிருந்து திருட்டுப்போன பொருட்கள் ஒன்லைனில் விற்பனையானதால் அதிர்ச்சி: சிக்கிய மகாராணியாரின் வேலையாள்!

அம்மு

கோல்ஃப் விளையாடிய டிரம்ப்! இந்த நேரத்தில் இது தேவையா? சர்ச்சை

அம்மு