உலகம்

இந்தியாவில் இருந்து திரும்பினால் 5 ஆண்டு சிறை! ஆஸ்திரேலியா அரசின் எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.

மேலும், கொரோனாவுக்கு அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, ஆஸ்திரேலிய நாடு வரும் மே 15 ஆம் தேதிவரை இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

மேலும், ஐபிஎல் அணியில் பங்கேற்ற ஆடம் சம்பா, மேன் ரிச்சர்ட்சன் இருவரும் இத்தொடரிலிருந்து ஏற்கனவே அறிவித்து வெளியேறி இருந்தனர்.

இந்த நிலையில், மற்ற கிரிக்கெட் வீரர்களான, டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும், ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகின்றனர்.

இவர்களுக்கு, பிசிசிஐ ஐபிஎல் வீர்களை பாதுகாக்க தனிகவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலியா அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய குடிமக்கள் நாடு திரும்பினால் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் 66 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

Related posts

உலகிலே இந்த நாட்டு பெண்கள் கவர்ச்சியற்றவர்கள், பாலுணர்வு அற்றவர்கள்! எப்படி குழந்தை? முன்னாள் அதிபர் பேச்சு

அம்மு

எங்கள் நாட்டு விடயத்தில் தலையிட்டால் பழிக்குப் பழி வாங்குவோம்: பிரித்தானியாவை மிரட்டும் சீனா!

அம்மு

இந்த நாடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன… உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட பட்டியல்

அம்மு