இந்தியா

ஸ்டாலின் வெற்றி பெற்றதால் பெண் செய்த நேர்த்திகடன்… ரத்த வெள்ளத்தில் பதற வைக்கும் புகைப்படம்

மு.க.ஸ்டாலின் முதல்வரானால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக பெண் ஒருவர் வேண்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்று தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் வெற்றி பெற்று வரும் 7ம் தேதி முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா என்ற பெண் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வரானால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார்.

அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலின் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து உண்டியலில் போட்டு விட எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டார்.

இந்நிலையில் கோவில் திறக்காததால் நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு அங்கு ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை பொதுமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Gallery

Related posts

சசிகலாவின் வருகை… அவரிடம் சரண்டர் ஆக காத்திருக்கும் எடப்பாடி? இரண்டாக உடையும் அபாயத்தில் அதிமுக!

அம்மு

திருமணமாகி 4 மாதம்! தாலி, பூ, மெட்டியை கணவனிடம் கழற்றி கொடுத்து சென்ற மனைவி: வைரலாகும் புகைப்படம்

அம்மு

பிரபல இரு கட்சிகளுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி; ஆச்சரியத்தில் ஆழ்த்திய தகவல்

அம்மு