சினிமா

பிரபலங்களை விடாமல் துரத்தும் கொரோனா.. பிரபல நடிகைக்கு கொரோனா

கோலிவுட் திரையுலகினர் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் அதர்வா, அஜித் பட நடிகை சமீரா ரெட்டி, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான அம்மு அபிராமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

‘ராட்சசன்’, ‘அசுரன்’ என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும், சிறந்த கதைக்களத்தை தேர்வு செய்து நடிப்பதால் மக்கள் மனதில் பதிந்து விட்டார். தற்போது இவர் ஹீரோயினாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென காய்ச்சல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டதை அடுத்து அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், இதனை அடுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் என்னை நானே தனிமை படுத்துக்கொண்டு, மருத்துவரின் பரிந்துரையின்படி மருந்துகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

முன்பை விட வலிமையாக மீண்டும் குணமாகி திரும்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், அதிக கவனமாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து அம்மு அபிராமி விரைவில் குணமாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related posts

16 வயதில் திசை மாறிய வாழ்க்கை! இளம் வயதில் நடிகை ஷகிலாவின் வாழ்க்கை நடந்த ஏமாற்றங்கள்?

அம்மு

விவேக் இல்லாம இவர பாத்துருக்கீங்களா? கண்கலங்க வைக்கும் புகைப்படம்…. கடும் சோகத்தில் உறைந்த பிரபலம்

அம்மு

நான் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது என்னுடைய உரிமை – கடுப்பான சீரியல் நடிகை ஷிவானி

அம்மு