விளையாட்டு

இலங்கை வீரர் திசாரா பெரேராவின் ஓய்வைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்! உருக்கத்துடன் அவர் வெளியிட்ட புகைப்படம்

இலங்கை வீரர் திசாரா பெரேராவின் ஓய்வைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாக, சக வீரர் தினேஷ் சண்டிமால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியின் அல்-ரவுண்டர் திசாரா பெரேரா(32), தன்னுடைய சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.

இளம் வீரர்களுக்கு வழி விடவும், அதிக திறமை கொண்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திடவும், குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இதுமட்டுமின்றி, இலங்கை ஒருநாள் அணியில் பல மூத்த வீரர்களை கைவிடுவது குறித்து இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இலங்கை அணியின் சக வீரரான தினேஷ் சண்டிமால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இன்னும் கொஞ்சம் நீ பொறுமையாக இருந்திருக்கலாம், இதைக் கேட்டவுடன் நான் அதிர்ச்சியடைந்தேன்.

சிறந்த ஆல்ரவுண்டரான உன்னுடன் விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. உன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். திசாரா பெரேரா 166 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2338 ரன்களும், 175 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். 84 டி20 போட்டிகளில் 1204 ரன்களும், 51 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். ஆறு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related posts

ஐ.பி.எல் தொடரை நடத்துவதற்கு பி.சி.சி.ஐ போட்ட புது பிளான்! மகிழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்

அம்மு

இலங்கை அணியுடனான தொடரா? அல்லது ஐபிஎல் தொடரா? ரு 1 கோடிக்கு ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட பிரபல வீரர் எடுத்த முடிவு

அம்மு

லங்கா பிரீமியர் லீக்: யாழ்ப்பாண அணியின் வெளிநாட்டு வீரர்கள் இறுதிசெய்யப்பட்டனர்!

அம்மு