விளையாட்டு

CSK-வை பொளந்து கட்டிய பொல்லார்ட்! கடைசி பந்தில் நடந்த சர்ச்சை: ஆதாரத்தை வெளியிட்ட ரசிகர்கள்

சென்னை அணிக்கெதிரான போட்டியின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் நடந்த சம்பவம் தொடர்பான புகைப்படத்தை இணையவாசிகள் அதிகம் பகிர்ந்து வருகின்றன.

ஐபிஎல் தொடரின் கடந்த சனிக்கிழமை நடந்த போட்டியில், சென்னை-மும்பை அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 218 ஓட்டங்கள் குவித்த நிலையில், அதை மும்பை அணி கடைசி பந்தில் எட்டி த்ரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் மும்பை வீரர் கிரன் பொல்லார்ட் 34 பந்தில் 87 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதி ஓவரின் கடைசி இரண்டு பந்துக்கு எட்டு ஓட்டங்கள் தேவை என்ற போது, 5-வது பந்தை பொல்லார்ட் சிக்ஸர் பறக்கவிட்டார்.

அதன் பின் இரண்டு ஓட்டங்கள் தேவை என்பதால், அடிப்பதற்காக பொல்லார்ட் காத்துக் கொண்டிருந்தார். பந்து வீச்சாளர் lungidi ngidi பந்து வீச வர, அப்போது மறுமுனையில் நின்றிருந்த குல்கர்ணி, பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு முன்பு கிரீசை விட்டு வெளியேறிவிட்டார்.

அதிலும் பாதி தூரமே சென்றுவிட்டார். இதைக் கண்ட ரசிகர்கள் இதை எப்படி நடுவர் கவனிக்காமல் விட்டார், அதுமட்டுமின்றி அப்படி அவர் ஓடாம ல் இருந்திருந்தால், ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்திருக்க முடியும், ரன் அவுட் ஆகியிருக்கலாம், போட்டியின் முடிவு மாறியிருக்கலாம் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

Related posts

சீன தயாரிப்புகளை புறக்கணி! கொந்தளித்த ஹர்பஜன் சிங்

அம்மு

அடுத்து ஆண்டு சென்னை அணியின் கேப்டன் யார்? சிஎஸ்கே அணியின் சிஇஓ முக்கிய தகவல்

அம்மு

பென் ஸ்டோக்சுக்கு நிகராக எந்த வீரரும் இந்தியாவில் இல்லை – கவுதம் கம்பீர்

அம்மு