உலகம்

திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த பில்கேட்ஸ்!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் 27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ் (bill Gates). இவரும் மெலிண்டாவும் (Melinda) 1987இல் முதல்முறையாக சந்தித்துக்கொண்டனர். மெலிண்டா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ப்ராடக்ட் மானேஜராக பணியில் சேர்ந்தார். இதன்தொடர்ச்சியாக இருவருக்குள்ளும் தொடங்கிய நட்பு 1994ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.

இதன்பிறகு 27 ஆண்டுகள் நீடித்திருந்த இவர்களது திருமண உறவு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பில் கேட்ஸும் மெலிண்டாவும் (Bill Gates – Melinda) பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

பில்கேட்ஸ்க்கு தற்போது 65 வயதாகிறது. மெலிண்டா கேட்ஸ்க்கு தற்போது 54 வயது ஆகிறது . பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் (Bill Gates Melinda) இருவரும் இணைந்து பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை நிறுவி பொது சுகாதாரம், கல்வி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் சேவையாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், இருவரும் பிரிவது பில் & மெலிண்டா கேட்ஸ் (Bill Gates Melinda)  ஃபவுண்டேஷனைப் பாதிக்குமா என கேள்வியெழுந்த நிலையில், பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா இருவரும், பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் தலைமை பொறுப்பை வகிப்பார்கள் என அந்த ஃபவுண்டேஷனின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

இதேவேளை பில் & மெலிண்டா கேட்ஸ் (Bill Gates Melinda) ஃபவுண்டேஷன் 1.75 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கும், மற்ற தடுப்பூசி பணிகளுக்கும் ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரித்தானியா இளவரசர் திடீர் மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்? அதிகாரப்பூர்வ தகவல்

அம்மு

உண்மையை உலகிற்கு அம்பலப்படுத்துவேன்: சூளுரைத்த சீன பெண் மருத்துவர்

அம்மு

வலியின்றி செலவின்றி கொரோனாவைக் கண்டுபிடிக்கும் முறை: பிரான்ஸ் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு!

அம்மு