செய்தி

வேறு நோய்கள் காரணமாக இறப்பவர்கள் கோவிட் மரணங்கள் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள்

கோவிட் – 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், புற்றுநோய், இருதய நோய் காரணமாக இறக்கும் நபர்கள் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் உள்ளடக்கப்பட மாட்டார்கள் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோவிட் தொற்றிய நிலையில், வேறு நோய்கள் காரணமாக இறக்கும் நபர்களை நாங்கள் கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் உள்ளடக்க மாட்டோம்.

உதாரணமாக நேற்று இரண்டு மரணங்கள் நிகழ்ந்தன. கோவிட் தொற்றி இருந்தாலும் அவர்கள் லியூகேமியா நோய் முற்றியதால் இறந்துள்ளனர்.

கோவிட் இந்த மரணங்களுக்கு காரணமில்லை. இருதய நோய் காரணமாக உயிரிழப்பவர்களுக்கும் கோவிட் வைரஸ் தொற்று காரணமில்லை.

இவ்வாறான நோய்களால் இறப்பவர்களை நாங்கள் கோவிட் மரணங்கள் பட்டியலில் சேர்க்க மாட்டோட் எனவும் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். 

Related posts

வடமராட்சியில் வாள்வெட்டுக்கும்பல் அட்டூழியம்: இளைஞனை காணவில்லை; முதியவருக்கு வெட்டு; 3 வீடுகள் சேதம்!

அம்மு

கோப்பாய் துயிலுமில்ல பகுதி முன்னணியால் சிரமதானம்: தடைவிதிக்க முயன்ற பொலிசார்; அடையாள அட்டை பரிசோதித்த கஜன் எம்.பி!

அம்மு

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அதிகபட்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள வழங்கப்பட்டுள்ள அதிகாரம்

அம்மு