செய்தி

திலும் அமுனுகமவுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி – முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ள விடயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த 69 லட்சம் மக்கள் அவர் ஹிட்லர் போன்று செயற்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும், இதனடிப்படையில் அவர் படிப்படியாக ஹிட்லராக மாறுவார் என பகிரங்கமாக கூறிய திலும் அமுனுகமவுக்கு சமூக பொலிஸ் இராஜாங்க அமைச்சு பதவியை வழங்கியதன் மூலம் அவரது கதை உறுதியாகி இருப்பதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

திலும் அமுனுகமவுக்கு சமூக பொலிஸ் ராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் செய்தியளார்கள் நேற்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

சாதாரணமாக அப்படியான ஒருவருக்கு பொருத்தமான இடமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். ஹிட்லர் செய்த காரியங்களையே பொலிஸாரும், இராணுவத்தினரும் செய்கின்றனர்.

திலும் அமுனுகமவுக்கு இந்த பதவியை வழங்கியுள்ளதன் மூலம் அந்த வார்த்தை மேலும் உறுதியாகியுள்ளது. ஹிட்லராக மாற வேண்டும் என்று நாங்கள் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்யவில்லை.

நடைமுறையில் இருந்த ஹிட்லர் வாதத்தை ஒழித்து அமைதியான மக்கள் பிரதிநிதித்துவத்தை வழங்கவே நாங்கள் அவரை தெரிவு செய்தோம்.

ஒருவர் ஹிட்லராக மாற வேண்டும் எனக் கூறியதால், அவருக்கு மேலும் பதவிகளை வழங்கினால், வேலியும் பயிரை மேயும் என்ற கதையையே நாங்கள் கூற வேண்டும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

முருத்தெட்டுவே ஆனந்த தேரர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கவும் அதன் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தை ஏற்படுத்தவும் முதன்மையாக இருந்து செயற்பட்ட பௌத்த பிக்குகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அம்பாறையில் இளம் தாயும் மகனும் வெட்டிப் படுகொலை! வெளியான தகவல்

அம்மு

கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதல் இடம்பெற்று யாழ்.மாணவன் கௌரவிப்பு

அம்மு

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தடுப்பூசி!

அம்மு