தொழில்நுட்பம்

8 நிமிடங்கள்லேயே முழு சார்ஜ்- மிரட்டலான பாஸ்ட் சார்ஜரை அறிமுகம் செய்த சியோமி!

இந்தியாவில் சியோமி நிறுவனமானது ஸ்மார்ட்போன் விற்பனையில் பெரியதாக்கத்தையே ஏற்படுத்தி வருகிறது.

தற்போது 200 வாட் ஹைப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த 4000 எம்ஏஹெச் பேட்டரியை 8 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிடுமாம்.

இதுமட்டுமின்றி 120 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இது 4000 எம்ஏஹெச் பேட்டரியை 15 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.

முன்னதாக சியோமி அறிமுகம் செய்த எம்ஐ 10 அல்ட்ரா மாடலில் 80 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டது. மேலும், புது அறிவிப்பின் மூலம் 100 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அறிமுகம் செய்த முதல் நிறுவனமாக சியோமி இருக்கிறது.

200 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை சியோமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கும் வீடியோவையும் சியோமி வெளியிட்டு இருக்கிறது.

இந்த வீடியோவில் 4000 எம்ஏஹெச் பேட்டரி 10 சதவீதம் சார்ஜ் ஆக 44 நொடிகளே ஆகிறது. மேலும் மூன்று நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும். 

Related posts

12GB RAM உடன் அறிமுகமாகியது புதிய ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி

அம்மு

டிக் டாக் இல்லை என்ற கவலையா? இதோ வருகிறது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

அம்மு

Google Assistant அறிமுகம் செய்யும் புதிய வசதி பற்றி தெரியுமா?

அம்மு