சுற்றுலா

யாழ்ப்பாணம் பகுதியில் அமைத்துள்ள கோண்டாவில் கிராமத்தின் தொகுப்பு

கோண்டாவில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாண நகரில் இருந்து ஏறத்தாழ 3.5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரை யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி ஆகிய இரு வீதிகளுமே ஊடறுத்துச் செல்கின்றன.

இவ்வூருக்கு தெற்கு எல்லையில் கொக்குவில், திருநெல்வேலி ஆகிய ஊர்களும், வடக்கில் இணுவில், உரும்பிராய் என்னும் ஊர்களும் உள்ளன. கிழக்குத் திசையில் இருபாலை அமைந்துள்ளது.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபகுதிக்கான தலைமைச் செயலகம் இவ்வூரில் பலாலி வீதியில் அமைந்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு காணொளியை காண்க.

Related posts

“கொழும்பு தேசிய நூதனசாலை” சுற்றி பார்க்கலாம்

அம்மு

சுற்றுலாப் பயணிகளின் மனதை தொட்டுள்ள பேராதெனியப் பூங்கா

அம்மு

பெலிவுல் ஓயாவை நோக்கி ஒரு பயணம்

அம்மு