7.5 C
Manchester
1 December 2021
Image default
இலங்கை

யாழில் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்ற 21 பேருக்கு கோவிட் தொற்று

யாழ்.நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் எம். எஸ். லேன் பகுதியில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட 21 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற இந்த விழாவில் பங்கேற்ற சிலருக்கு கோவிட் தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அதில் கலந்துகொண்ட 58 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அவர்களிலேயே 21 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று பரவலையடுத்து ஒன்றுகூடல்களைத் தவிர்க்கும் வகையில் அரசு விடுத்துள்ள அறிவுறுத்தல்களையும் மீறி இடம்பெற்ற குறித்த பூப்புனித நீராட்டு விழாவில் அளவுக்கதிகமானவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வடபகுதியில் தொடர்ச்சியாக தாக்குதலுக்குள்ளாகும் கிறிஸ்தவ ஆலயங்கள்!

SudarSeithy

இலங்கையில் சடுதியாக குறைந்த சிசு பிறப்பு வீதம்!

SudarSeithy

யாழில் மனைவியின் கண் முன்னே நஞ்சருந்திய கணவன்; நேர்ந்த சோகம்!

SudarSeithy