விளையாட்டு

இங்கிலாந்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்திய அணியினர்! வீடியோ வெளியானது

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ளது.

அதன்பிறகு இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர், செளதாம்ப்டன் சென்ற இந்திய அணியினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் இந்திய அணியினர் இங்கிலாந்து சென்றது குறித்த வீடியோவை பிசிசிஐ வெளியிட, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Related posts

ஆசையுடன் விளையாட காத்திருந்த ஆப்கான் வீரருக்கு இப்படி ஒரு நிலையா வரனும்? 30 லட்சம் ரூபாய் பேச்சே

அம்மு

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரை கருப்பன் என கூறி இழிவுப்படுத்திய இந்திய அணி வீரர்? சர்ச்சையை கிளப்பிய பதிவு

அம்மு

அறிகுறிகளே இல்லாமல் 5 முறை கொரோனா பாதிப்பு!.. பிரபல வீரருக்கு வந்த மகிழ்ச்சியான செய்தி

அம்மு