தொழில்நுட்பம்

விரைவில் இவங்களும் ஏர்டேக் பயன்படுத்தலாம்?

ஆப்பிள் நிறுவனம் ஏர்டேக் சாதனத்தை அறிமுகம் செய்து ப்ளூடூத் டிராக்கர் பிரிவில் களமிறங்கியது. தற்போது இந்த சாதனம் ஒஎஸ் தளத்தில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த நிலையில், ஏர்டேக் சாதனத்தை ஆண்ட்ராய்டு பயனர்களும் பயன்படுத்தும் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏர்டேக் சாதனத்தை பயன்படுத்துவதற்கென ஆப்பிள் விரைவில் ஆண்ட்ராய்டு செயலியை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. ஏர்டேக் சாதனத்திற்கான புது ஆப் கொண்டு ஆண்ட்ராய்டு பயனர்கள் ப்ளூடூத் சாதனத்தை பயன்படுத்தி காணாமல் போன பொருட்களை கண்டுபிடிக்க முடியும்.

ஆண்ட்ராய்டு செயலி பற்றிய விவரங்களை ஆப்பிள் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடும் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஏர்டேக் சாதனத்திற்கான புது அப்டேட் ஒன்றை ஆப்பிள் வெளியிட்டது. இந்த அப்டேட் ஏர்டேக் அலெர்ட்களை வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

WeChat அப்பிளிக்கேஷன் தடை செய்யப்படுவதை விரும்பாத முன்னணி நிறுவனங்கள்

அம்மு

வாழைப்பழத்தின் அளவில் பற்களைக் கொண்ட முதலை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அம்மு

செவ்வாய் கிரகம் நோக்கி பயணிக்கும் Tianwen-1 நிலவு, பூமியை படம் எடுத்த அனுப்பியது

அம்மு