தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் விரைவில் வெளியிடும் அசத்தலான 3 அப்டேடுகள்.. பயங்கர எதிர்பார்ப்பில் பயனாளர்கள்!

மக்களில் அதிகமாக குறுஞ்செய்திகளை பகிர்ந்து வரும் செயலி என்றால் அது வாட்ஸ் அப் தான். இதில், வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட்களுக்கு வாட்ஸ் அப் செயலி பெருமளவில் உதவுகிறது.

தனி நபருக்குள்ளும், குழுவிலும் இதில் தகவல்களை பரிமாற்றிக் கொள்ளலாம். இந்நிலையில் வரும் நாட்களில் வாட்ஸ் அப்பில் புதிதாக சில அம்சங்கள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதில், முக்கியமாக அதிகபட்சம் ஒரு வாட்ஸ் அப் கணக்கை நான்கு சாதனங்களில் (Device) பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாம் அடுத்தவர்களுக்கு அனுப்பும் செய்திகளை அவர்கள் ஒரு முறை பார்த்ததும் தானாகவே மறைந்து போகும் வகையில் ‘View Once’ என்ற அம்சம் இடம்பெற உள்ளது.

இதுமட்டுமின்றி ‘Disappearing Mode’ என்ற வசதியும் விரைவில் வர உள்ளதாம். அதன் மூலம் சேட் திரெட்களில் உள்ள மெசேஜ்களை தானாகவே அழிக்கவும் முடியும் என தெரிகிறது.

இதனை வாட்ஸ் அப் சர்வதேச தலைவர் Will Cathcart தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

மே 15 பிறகு வாட்ஸ் அப் வைக்கும் செக் என்ன? வேற வழியே இல்லையாம்…!

அம்மு

ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் கிடைக்கவுள்ள புதிய வசதிகள்

அம்மு

சாம்சுங் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்புசி Galaxy M01s

அம்மு