சினிமா

சமந்தாவை தூண்டிவிடுபவர் நடிகர் விஜய்யின் மேனேஜரா? சர்ச்சையை கிளப்பிய யுடியூப் விமர்சகர்கள்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது பெரிய சிக்கலிலும் சர்ச்சையிலும் சிக்கி வருபவர் நடிகை சமந்தா. ஆரம்பகாலத்தில் க்ளாமர் காட்டினாலும் படுக்கையறை காட்சிகள் சர்ச்சை காட்சிகள் என எதிலும் சிக்காமல் இருந்து வந்தார்.

இந்த கொரோனா வைரஸால் படங்களில் அதிக கவனம் செலுத்தியும் வருகிறார் சமந்தா. இந்நிலையில் நேற்று ஓடிடி தளத்தில் அவர் நடித்த ஃபேமிலி மேன் 2 படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தும் வண்ணம் டிரைலர் அமைகிறது என்று இப்படத்திற்கு பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வழக்கு தொடுத்தனர்.

இதைமீறி படம் ஓடிடி தளத்திலும் தொலைக்காட்சியிலும் வெளியானது. இந்நிலையில், நடிகை சமந்தாவின் மேனேஜர் யார் என்று புதிய சர்ச்சை செய்தியாக கூறியுள்ளார்கள் யுடியூப் விமர்சகர்கள். இப்போ எல்லாம் பிரபலங்களின் மேனேஜர்கள் யார் யார் என்பது அனைவருக்கும் தெரியவருகிறது.

அந்தவகையில், நடிகர் விஜய்யின் மேனேஜராக பணியாற்றுபவர் ஜெகதீசன் என்பவர். அவர் நடிகை சமந்தாவிற்கும் மேனேஜராக பணியாற்றி வருகிறாராம். அப்படி நடிகர் விஜய்யின் மேனேஜர் தான் சமந்தாவை இப்படியாக படங்களில் நடிக்க கமிட்டாகி வைக்கிறது என்கிறார்களாம். மேலும், விஜய் மேனேஜர் ஜெகதீசனை திட்டியும் வருகிறார்கள்.

தற்போது சமந்தாவிற்கு எதிராக பலர் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகிறார்கள். நடிகை கீர்த்தி சுரேஷிற்கும் மேனேஜர் ஜெகதீசன் என்பது கூடுதல் தகவல்.

Related posts

தல அஜித்தின் இந்த குழந்தை பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. முதன் முறையாக இதோ..

அம்மு

நடிகை கீர்த்தி சுரேஷின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா!!!

அம்மு

100 மில்லியன் வரவிருக்கும் ரவுடி பேபி பாடல் மூலம் மட்டுமே தனுஷிற்கு இத்தனை கோடி கிடைத்ததா?

அம்மு