விளையாட்டு

இந்திய அணியில் எனக்கு இடம் கிடைக்காமல் போக இதுவே காரணம்! தமிழன் தினேஷ் கார்த்திக் வேதனை

 இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் தினேஷ் கார்த்திக், தனக்கு அணியில் இடம் கிடைக்காமல் போனதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர், கொரோனா பரவல் காரணமாக இடையில் ஒத்தி வைக்கப்பட்டு, வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் சில வெளிநாட்டு வீரர்கள், இந்த காலகட்டத்தில், அவர்கள் சொந்த நாட்டிற்கான போட்டிகள் இருப்பதால், ஐபிஎல்லில் விளையாட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி கொல்கத்தா அணியின் கேப்டன் ஆன, இயான் மோர்கன் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது கடினம் என்பதால், கொல்கத்தா அணிக்கு மீண்டும் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ட போது, அவர் என்னை கேப்டன் பதவி தேடி வந்தால், ஏற்றுக் கொள்ள தயார் என்று கூறியுள்ளார். மேலும், இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் தினேஷ் கார்த்திக் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

அதில், இந்திய நிர்வாகம் வயதின் அடிப்படையில் யாரும் தேர்வு செய்யாது. இந்திய அணிக்காக விளையாடி வரும் ஒருவர் பிட்னெஸ் டெஸ்டில் தேர்ச்சி பெற்றுவிட்டாலும், தொடர்ந்து சிறப்பாக விளையாடினாலும் போதும். எனது தற்போதைய ஒரே இலக்கு டி.20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவது தான்.

அடுத்தடுத்து இரண்டு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதால் என்னால் முடிந்தவரை இந்திய அணியில் இடம்பிடிக்க போராடுவேன்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் சரியாக விளையாடாததால் இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக புறக்கணிப்பட்டேன், டி20 போட்டிகளில் சிறப்பாகவே விளையாடிய போதிலும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியிலும் எனக்கான வாய்ப்பு கிடைப்பது இல்லை என்று குறிப்பிட்டார்.

Related posts

உலக கோப்பை நடைபெற்றால் ரசிகருக்கு அனுமதி வழங்கப்படும் – ஆஸ்திரேலியா

அம்மு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள்: பெங்களூரு – ராஜஸ்தான், கொல்கத்தா – டெல்லி மோதல்

அம்மு

ஏன் தடைசெய்தார்கள் என்று உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை: முகமது அசாருதீன்

அம்மு