இலங்கையில் வடமாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதிதான் பண்டதரிப்பு.
பண்டதரிப்பு என்ற பெயர் வர காரணம் சரியாக யாருக்கும் தெரியவிட்டலும் வெவ்வேறு காரணங்களில் சொல்லப்படுகின்றது.
ஒரு சிலர் போர் காலங்களில் பண்டங்களை தரிந்துவைக்கும் இடமாக பயன்படுத்தி இருந்திருக்கலாம் என்கின்றனர்.
வேறு சிலர் இது பாண்டியர் படையெடுப்பின் போது அதன் படைகள் தரிந்து செல்லும் இடமாக சில காலம் இருந்ததால் முன்னர் பாண்டியன் தரிப்பு என அழைக்கப்பட்டு தற்போது பண்டதரிப்பு என அழைக்கப்படுவதாக சொல்கின்றனர்.