உலகம்

இவர் தான் வடகொரியா ஜனாதிபதியா? உடல் மெலிந்த நிலையில் எலும்பும் தோலுமாக கிம் ஜாங் உன்

புகைப்பழக்கம் கொண்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல் மெலிந்த நிலையில் தோற்றமளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது சர்வாதிகாரப் போக்கால் உலக நாடுகள் அனைத்திலும் அறியப்படுபவர்.

இவர்ம் கடந்த சில மாதங்களாகவே பொது வெளியில் தோன்றாமலே இருந்து வந்தார். காரணம் கொரோனா வைரஸ் அதிகரிப்பின் தான் என கூறி வந்தனர்.

இதையடுத்து, 4 மாதத்திற்கு பிறகு கிம் ஜாங் உன் பொது வெளியில் கலந்துகொண்டுள்ளார். ஆனால், இதற்கு முன்பு இருந்த தோற்றத்தை விட முற்றிலும் உடல் எடை மெலிந்த நிலையில் தோற்றமளித்துள்ளார்.

இதனால், இவருக்கு என்ன ஆயிற்று என உள்ளூர் ஊடகங்கள் கேள்வியை எழுப்பி வந்தனர். அதற்கு காரணம், புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட கிம் ஜாங் உன், உடல் நிலை பற்றி கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் உலா வருகின்றன.

மேலும், கடந்த நவம்பர் மாதம் 140- கிலோ எடையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. அதீத உடல் எடை காரணமாக அவர் இருதய நோய் பாதிப்புக்கு ஆளாகலாம் எனவும் கூறி வந்தனர் ஆனால் உடல் மெலிந்த நிலையில் தற்போது காணப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related posts

மிக ஆபத்தான அடுத்த சிக்கலில் சீனா: கடுமையான நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு

அம்மு

பிளாஸ்டிக் கழிவுகளால் மட்டுமே உருவாக்கப்பட்ட தீவு; எங்குள்ளது தெரியுமா?

அம்மு

உலகின் முன்னணி நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சீனா

அம்மு