செய்தி

யாழில் திருமணத்தில் பங்கேற்றவர்களை தனிமைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு

பயணத்தடைக் காலத்தில் திருமண மண்டபத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வு தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களைத் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் 14 நாள்கள் தனிமைப்படுத்துமாறும், அவர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பண்டத்தரிப்பு பிரான்பற்றில் சில தினங்களுக்கு முன்னர் திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. வீட்டில் திருமணத்துக்கு அதுவும் வீட்டாருடன் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்தப் பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் உறவினர்களுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் சுகாதாரப் பகுதியினருக்கு முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து திருமண நிகழ்வில் பங்கேற்ற 47 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அடையாளம் காணப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

Related posts

நீதிபதி இளஞ்செழியன் இலங்கைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! தென்னிலங்கை ஊடகங்கள் புகழாரம்

அம்மு

மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸாரின் எண்ணிக்கை உயர்வு

அம்மு

மீண்டும் பேலியகொட மீன் சந்தை! ஒன்லைன் ஊடாக கொடுக்கல் வாங்கல்கள்

அம்மு