செய்தி

தங்கத்தை எடுப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு பழைமையான புதைக்குழியை தோண்டிய நபர்கள்

10 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த வர்த்தகர் ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை தோண்டி தங்கத்தை தேடிய இரண்டு பேரை யாழ் – வல்வெட்டித்துறை, உரிகாடு பிரதேசத்தில் மயானத்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உரியகாடு மயானத்தில் 10 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட புதைக்குழி ஒன்றில் இருந்து தங்கத்தை எடுப்பதற்காக இரண்டு பேர் தோண்டுவதாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, குழியை தோண்டிக்கொண்டிருந்த இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இராணுவ அதிகாரிகள் இந்த தகவலை பொலிஸாருக்கு வழங்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீனவர்கள் எனவும், உரிகாடு மயானத்தில் கூலிக்கு சவக்குழி தோண்டும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

10 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த வர்த்தகர் அவருக்கு சொந்தமான தங்க ஆபரணங்களுடன் புகைப்பட்டதாக பிரதேசத்தில் பரவிய வதந்தி காணமாக இவர்கள் புதைக்குழியை தோண்டி தங்கத்தை எடுக்க முயற்சித்துள்ளனர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Related posts

வீட்டிற்கே சென்று கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்; மக்களே அவதானம்

அம்மு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1631ஆக உயர்வு

அம்மு

கொழும்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்

அம்மு