உலகம்

கொரோனாவின் மற்றொரு அலைகயை தடுக்க இது போதாது… ஐரோப்பாவுக்கு WHO எச்சரிக்கை

எதிர்வரும் கோடை வடுமுறை காலத்தில் ஐரோப்பியர்கள் பொறுப்புடன் பயணிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சமீபத்தில் வாரங்களில் ஐரோப்பிய கண்டத்தில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வந்தாலும், இன்னும் ஐரோப்பிய கண்டம் கொரோனா பிடியில் தான் இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய தலைவர் Hans Kluge கூறியதாவது, பொது இடங்களில் மக்கள் கூடுவது அதிகரிப்பு, அதிக மக்கள் நடமாட்டம் மற்றும் எதிர்வரும் வாரங்களில் பெரிய திருவிழாக்கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என WHO ஐரோப்பா விலியுறுத்துகிறது.

பயணம் மேற்கொள்ள விரும்பினால் அதை பொறுப்புடன் செய்யுங்கள். அபாயங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். பொது அறிவைப் பயன்படுத்துங்கள், கொரோனாவை கட்டுக்குள் வைக்க இத்தனை நாள் பட்ட கஷ்டங்களை வீணாக்கி விடாதீர்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய கண்டத்தில் பெரும்பாலான நாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாம் அனைவரும் அங்கீகரிக்க வேண்டும், இன்னும் நாம் கொரோனா பிடியிலிருந்து முழுமையாக மீளவில்லை என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட டெல்டா மாறுபாடு எனப்படுவது கவலைக்குரியதாக இருக்கிறது.

ஐரோப்பிய கண்டத்தில் வெறும் 30% பேர் மட்டுமே தடுப்பூசிகளின் முதல் டோஸைப் பெற்றுள்ளதால், வைரஸின் மற்றொரு அலையை தடுக்க இது போதாது என்று Hans Kluge கூறினார்.

Related posts

25,000 டொலர் பரிசை வென்ற 14 வயது இந்திய வம்சாவளி சிறுமி! எப்படி தெரியுமா?

அம்மு

ஆஸ்திரியாவில் நாங்கள் தான் தாக்குதல் நடத்தினோம்! ஏதற்காக தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை

அம்மு

வென்டிலேட்டரில் 147 நாட்கள்… இறுதியில் கேரள இளைஞர் பிரித்தானியாவில் மரணம்

அம்மு